வெளிச்சம் தொலைக்காட்சி துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: கடந்த காலங்களில் கார்ப்ரேட் நிறுவனங்கள், ஆளும், ஆண்ட கட்சிகள் மட்டுமே தொலைகாட்சியை துவக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாம் விசிக சார்பில் துவங்கப்படும் வெளிச்சம் தொலைகாட்சி ஏழை எளிய மக்களின் அவல நிலையை வெளிக் கொண்டுவர மகத்தான சேவை புரியும். இந்த தேர்தலில் நமது அணிக்கு பக்கபலமாக தீக்கதிர், ஜனசத்தி நாளேடுகளும், கேப்டன் தொலைகாட்சியும், வெளிச்சம் தொலைகாட்சியும் இருக்கும் என்றார்.
