தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி
கடந்த ஆண்டு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பெய்த கடும் மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம், பிற பகுதிகளில் நிலவிய வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகள், பொது மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள்.
இதனால் மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் உள்ளானார்கள். எதிர்வரும் புத்தாண்டை மக்கள் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள், நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
மலரும் புத்தாண்டில், எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்ற நிலையை அடைய, அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும்.
துன்முகி ஆண்டு தொடங்கி சித்திரைத் திங்கள் பிறந்து புத்தாண்டு மலரும் நாள்.
இந்நாள் தமிழ் மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும், நல்லமுது படைத்து, உற்றார், உறவினர், நட்போடு உண்டு, பிறருக்கு பகிர்ந்து கொடுத்து மகிழும் நாள் ஆகும்.
தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என் இதய பூர்வமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnelection2016
#thehindu
