சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்

சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்றும், 90 சதவீதம் புதியவர்களுக்கு த.மா.கா. சார்பாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஜி.கே.வாசன் கூறினார் இதுவரை ஆண்ட தி.மு.க.-அ.தி.மு.க.வும் தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றி விட்டன. அந்த இருட்டில் இருந்து மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது தான் எங்கள் கூட்டணி.

த.மா.கா. வேட்பாளர் பட்டியல் இன்னும் நான்கு அல்லது ஐந்து தினங்களில் வெளியிடப்படும்.

இந்த சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அதே போல் எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 90 சதவீதம் இதுவரை தேர்தலில் போட்டியிடாத புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்படும்.

ஊழலற்ற ஆட்சி

நான் வருகிற 20-ந் தேதியன்று, தஞ்சையில் எனது பிரசாரத்தை தொடங்குகிறேன். 21 அல்லது 22-ந் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதன் பின் தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி வரை சுமார் 150 தொகுதிகளில் நான் பிரசாரம் செய்கிறேன்.

மக்களிடையே உண்மை நிலையை சொல்லி ஓட்டு கேட்போம். ஊழலற்ற ஆட்சி என்ற நிலையில் இருந்து அ.தி.மு.க.வும். தி.மு.க.வும் வெகு தொலைவில் சென்று விட்டன. ஆனால் தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி அதனை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

6 தொகுதிகள்

த.மா.கா.வில் இருந்து தங்களுடைய சுயநலத்திற்காக, சில தனி நபர்கள் வெளியே சென்று இருக்கிறார்கள். சிலர் இயக்கத்தின் பொறுப்புகளில் இருந்தும் கூட, பேராசை பெரு நஷ்டம் என்ற ரீதியில் சென்று இருக்கிறார்கள். அவர்கள் வெளியேறியதால் த.மா.கா.விற்கு எந்த நஷ்டமும் இல்லை.

த.மா.கா.வும், காங்கிரஸ் கட்சியும் 6 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. அந்த தொகுதிகளில் மட்டுமின்றி மற்ற அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.-தி.மு.க. கூட்டணிக்கு எதிராக எங்களது பிரசாரம் கடுமையாக இருக்கும்.

ஐ.ஐ.டி.யில் கட்டண உயர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்றும், 90 சதவீதம் புதியவர்களுக்கு த.மா.கா. சார்பாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஜி.கே.வாசன் கூறினார்