தமாகாவில் புதியவர்களுக்கு வாய்ப்பு ஜி.கே.வாசன் பேட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.கட்சியில் இருந்து சிலர் சுயநலத்துக்காக வெளியே சென்றுள்ளனர். பேராசை பெரும் நஷ்டம் என்ற ரீதியில் அவர்கள் வெளியேசென்றுள்ளனர். அவர்கள் வகித்த பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள். 26 தொகுதிகளிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
எங்கள் தேர்தல் கூட்டணியை தாமதமாகவே அறிவித்தோம். அதற்கு, நான் பொறுப்பேற்று கொள்கிறேன். ஒருவேளை விரைவாக கூட்டணி முடிவு எடுத்திருந்தால் அதிக சீட்டுக்களை பெற்றிருக்க முடியும்.இவ்வாறு வாசன் கூறினார்.
