இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவரில் ஒருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளரும் ஆன A.B. பரதன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன்.
1957ம் ஆண்டிலேயே A.B. பரதன் அவர்கள் மகாராஷ்ட்ரா மாநிலம், நாக்பூர் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று சிறப்பாக பணியாற்றியவர்.
தன்னுடைய கடின உழைப்பால், மக்கள் பணியால் நாட்டின் மிகப் பெரிய தலைவராக உயர்ந்த பெருமை அவருக்கு உண்டு. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அற்பணித்து கொண்டவர். இவர் மக்களின் நலனுக்காக பல்வேறு ஆர்பாட்டங்கள், போராட்டங்களில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் தலைமையேற்றும் நடத்தியவர். இவர் ஏழை, எளிய மக்களுக்காவும், அடித்தட்டு மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தொழிலாளர்களின்முன்னேற்றத்திற்காக அரும்பணியாற்றியவர்.
அவரது மறைவு நாட்டிற்கே பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
