தமிழகத்தில் தி.மு.க. வும், அ.தி.மு.க. வும் மாறி, மாறி ஆட்சி செய்து எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் கே.செல்வகுமாரை ஆதரித்து தலைவர் திரு.ஜி.கே.வாசன், சங்ககிரி, தேவூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார்.

சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே த.மா.கா. வேட்பாளரை ஆதரித்து வேனில் இருந்தபடி அவர் பேசியது:

* தமிழகத்தில் தி.மு.க. வும், அ.தி.மு.க. வும் மாறி, மாறி ஆட்சி செய்து எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை.

* மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால், குப்பனூர் பகுதியில் தொடர் ந்து விபத்துகள், இறப்புகள் நடப்பதை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படும்.

* சங்ககிரியில் ஆட்டோ நகர் அமைக்க முழு முயற்சியை மேற்கொள்ளப்படும். தாரமங்கலம் தனி தாலுகா உருவாக்கப்படும்.

* தாரமங்கலம் சந்தைப்பேட்டையில் விரிவான பேருந்து நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும், தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதி செய்து கொடுக்கப்படும். இடங்கணசாலை பகுதியில் ஐவுளிப் பூங்கா அமைக்கப்படும்.

* திமுக, அதிமுகவுக்கு ஆட்சி, அதிகார பலம், பணப் பலம் இருக்கலாம் மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் பலம் இருக்கிறது. எனவே, த.மா.கா. வேட்பாளருக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.13103476_1228263143858502_1286716133867667935_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *