மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வினை இந்த ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது கிராமப்புற, நடுத்தர, தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு, மற்றும் மாநில மொழிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி, இந்த பிரச்சினையில் சட்டத்தின் நுட்பங்களை ஆராய்ந்து, அதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசும் இதனை கவனத்தில் கொண்டு மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து பழைய நடைமுறையை பின்பற்ற தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்து மாணவ, மாணவியர்கள் நலன் காக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

‪#‎gkvasan‬ ‪#‎tamilmaanilacongress‬ ‪#‎tmcfortn‬ ‪#‎tnelection2016‬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *