சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் கே.செல்வகுமாரை ஆதரித்து தலைவர் திரு.ஜி.கே.வாசன், சங்ககிரி, தேவூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார்.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே த.மா.கா. வேட்பாளரை ஆதரித்து வேனில் இருந்தபடி அவர் பேசியது:
* தமிழகத்தில் தி.மு.க. வும், அ.தி.மு.க. வும் மாறி, மாறி ஆட்சி செய்து எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை.
* மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால், குப்பனூர் பகுதியில் தொடர் ந்து விபத்துகள், இறப்புகள் நடப்பதை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படும்.
* சங்ககிரியில் ஆட்டோ நகர் அமைக்க முழு முயற்சியை மேற்கொள்ளப்படும். தாரமங்கலம் தனி தாலுகா உருவாக்கப்படும்.
* தாரமங்கலம் சந்தைப்பேட்டையில் விரிவான பேருந்து நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும், தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதி செய்து கொடுக்கப்படும். இடங்கணசாலை பகுதியில் ஐவுளிப் பூங்கா அமைக்கப்படும்.
* திமுக, அதிமுகவுக்கு ஆட்சி, அதிகார பலம், பணப் பலம் இருக்கலாம் மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் பலம் இருக்கிறது. எனவே, த.மா.கா. வேட்பாளருக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
