மகளிர் தின வாழ்த்துச் செய்தி

ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. 63 கோடி மகளிரை உள்ளடக்கிய இந்தியாவில், மகளிரும் முன்னேறும் போது தான் தேசம் முன்னேற்றம் அடையும். ஆகவே ஆண்டுக்கு ஒரு நாள் மகளிர் தினம் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் மகளிர் நலன் காக்கவும், வளர்க்கவும் நாம் பாடுபட வேண்டும். மேலும் நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது – மகளிருக்கு நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு தரும் 108 ஆவது சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்,

ஆண்டுதோறும் மகளிர் நலன் பேணும் வகையில் மகளிருக்கான தனி பட்ஜெட் (Gender Budget) வெளியிட வேண்டும்; நீதிபதிகள், துணை வேந்தர்கள், தன்னாட்சி உரிமைபெற்ற ஆணையங்களில் மகளிர் போதிய அளவில் இடம் பெற வழிகாண வேண்டும்; ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தொகுதியில் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள மகளிர் நலனுக்கும், வளத்திற்கும், உயர்வுக்கும் பாடுபட வேண்டும்; அதற்காகவே தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும்; தேர்தல் நெருங்குவதால் தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு மகளிருக்கு நியாயமான விகிதத்தில், வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

மகளிர் நலன் காக்க, அவர்கள் முன்னேற, நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி மகளிர் அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
G.K. வாசன்
தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்

‪#‎gkvasan‬ ‪#‎tamilmaanilacongress‬ ‪#‎tmcfortn‬ ‪#‎tnelection2016‬12802762_988717234536549_5947013804749145692_n