பெட்ரோல், டீசல் விலையின் மீதான கலால்வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட சரிந்துள்ளதாகவும், ஆனால் அதற்கேற்றாற்போல் பெட்ரோல், டீசல் குறைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவோம் எனக்கூறிய பாரதிய ஜனதா கட்சி, ஆட்சிக்கு வந்தவுடன் கலால் வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவது என்ன நியாயம்? எனவும் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து விலையேற்றம் மற்றும் கொள்கை முடிவுகளை மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
