த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்த இரங்கல் செய்தியில், ‘காவிரிப் பிரச்சினை தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தொண்டர் விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கும், தொண்டர்களுக்கும், தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட விக்னேஷின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று கூறப்பட்டு உள்ளது
