உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும், முக்கிய முடிவு எடுப்பது குறித்தும் மாவட்ட தலைவர்களுடன் ஜி.கே.வாசன் நாளை ஆலோசனை நடத்துகிறார். இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 20ம் தேதி (நாளை) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் துணை அமைப்புத் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
20ம் தேதி மதியம் 2.30 மணியளவில், சென்னை, தியாகராய நகர், காமராஜர் நினைவு இல்லம் அருகில் உள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் தமாகா தலைவர் வாசன் தலைமையில் தமாகாவின் மூத்த முன்னணித் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் துணை அமைப்புத் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
