ராம்குமார் மரணம் சிறைக்காவலர்களின் அலட்சியப் போக்கை காட்டுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்குமார் மரணம், சிறைச் சாலையில் கைதிகளைக் கண்காணிக்க வேண்டிய காவலர்களின் அலட்சியப் போக்கையும், போதிய பாதுகாப்பற்ற தன்மையையும் எடுத்துக் காட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடந்து வந்த நிலையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராம்குமார் மரணம் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்குமாரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக தெரிவித்துள்ளார். அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் ராம்குமார் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ராம்குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டுமென கூறியுள்ள ஜவாஹிருல்லா, இது தொடர்பாக உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.
