திருட்டு விசிடியை தடுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்னும் பல புதிய படங்கள் திருட்டு டிவிடி, விசிடி மற்றும் இணைய தளம் மூலம் வெளிவந்துகொண்டு தான் இருக்கின்றன. எனவே தமிழக அரசு புதிய அணுகுமுறையின் மூலம், தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு இனி வரும் காலங்களில் இது போன்ற திருட்டு டிவிடி, விசிடி மற்றும் இணைய தளம் மூலம் புதிய படங்கள் வெளிவராமல் இருப்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அதன் அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டு, திரைப்படத் துறையையும் வளர்க்க வேண்டும் என த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளா
