இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துக் கூறியுள்ளார்.

 இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை பாராட்டுக்குரியது.

 20 செயற்கைக்கோள்களில் 2 சென்னை மற்றும் பூனேவில் உள்ள கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இது, இந்திய மாணவர்கள் அறிவியல் துறையில் கொண்ட ஈடுபாட்டை உலக அளவில் பறைசாற்றுகிறது.

 இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்பும், பணியும் தொடர என் மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *