தஞ்சை மாவட்டத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்

தஞ்சை மாவட்டத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் கோரிக்கை

இது தொடர்பாக ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :-

தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் விளையும் நெல் அந்தந்த பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் தேங்கி கிடக்கின்ற நெல் மூட்டைகள் நனைந்து நெல் முளைத்து விடும்.

இதனால் நெல் வீணாகி, நெல் மூட்டைகளை விற்க முடியாத சூழல் ஏற்படும்.

எனவே தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்து, நெல் மூட்டைகளுக்கு உரிய விலையை பண்டிகை காலத்தை முன்னிட்டு கால தாமதமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.