கிராம புறங்களிலும் மலிவுவிலை பருப்பு வழங்க வேண்டும்:04-11-2015 சென்னையில்தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மை அணி மாநில செயற்குழு கூட்டத்தின் போது…. ஜி.கே.வாசன் பேட்டி
சென்னை, நவ. 4–
தா.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும், தலித்துக்களுக்கும் எதிராக சமூகவிரோத போக்கு அதிகரித்து வருகிறது. பா.ஜனதா கட்சிக்கு சகிப்பு தன்மை இல்லை. அதனை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பருப்பு விலை உயர்வை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும். கிராம புறங்களிலும் மலிவு விலையில் பருப்பு விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
சீன பட்டாசு இறக்குமதி செய்வதால் ரூ.3 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது. அதை மத்திய அரசு முழுமையாக தடைவிதித்து தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெய்து வரும் மழையால் சாலைகள் மோசமடைந்து உள்ளன. அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும். மீனவர்கள் பிரச்சினையில் மத்திய – மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதில் நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் நலகூட்டு இயக்கத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்புக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது சுற்றுப்பயணத்தை முடித்த பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும்.
ஹஜ் மற்றும் எருசலேம் போன்ற புனித தலங்களுக்கு செல்லும் கிறிஸ்தவ மற்றும் யாத்திரிகர்களுக்கு நிதியை அதிகப்படுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
