தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

இது தொடர்பாக ஐயா ஜி.கே.வாசன் இன்று வெளிட்ட அறிக்கை:-

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளை சரிவர கவனிக்க முடியவில்லை.

தற்போது மழைக் காலம் என்பதால் டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. எனவே அரசு டாக்டர்கள் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் டாக்டர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். எனவே, உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அதுவரை ஒப்பந்த அடிப்படையிலாவது மருத்துவப் பணியிடங்களை நிரப்பி 24 மணி நேரமும் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கிராமங்களில் நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மூலம் மருத்து சேவை கிடைக்க வழி செய்ய வேண்டும் என ஐயா ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.