ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏமாற்றம் அளிக்கிறது.
இதை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
விழுப்புரம் மத்திய மாவட்ட தமாகா செயல்வீரர்கள் கூட்டம், வானூர் அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலைப் பகுதியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர் திரு.ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியது:
?? ஜல்லிக்கட்டுக்கான தடை ஏமாற்றம் அளிக்கிறது. தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
?? மீனவர்களை விடுவிக்க முடியாது என இலங்கை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார்.
மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
?? முல்லைப் பெரியாறு அணையை ஒட்டி குமுளி அருகே கேரள அரசு புதிதாக திறந்துள்ள காவல் நிலையத்தை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
?? தமிழக அரசு கரும்புக்கான ஆதரவு விலையை உயர்த்தியுள்ளது.
ஆனால், கரும்பு விவசாய செலவினங்கள் உயர்ந்துள்ளதால், அதற்கேற்ப கொள்முதல் விலையை கூடுதலாக வழங்க வேண்டும்.
?? தமிழகத்துக்கு வெள்ள நிவாரண இடைக்கால நிதியாக, மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும்.
?? விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 50 சதவீத லாபம் வரும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
?? தென்பெண்ணையாற்றில் தொடரும் மணல் திருட்டால் 2 ஆயிரம் கிராமங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மணல் திருட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தலைவர் திரு.ஜி.கே.வாசன்
