சென்னை பறக்கும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில், விபத்துகள் நிகழா வண்ணம் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை
பறக்கும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், திருச்சி விபத்தினை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழா வண்ணம் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில், திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
