“மக்களை நோக்கி மக்கள் தளபதி பயணம்” கொங்கு மண்டலத்தில் அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்குகிறது

தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசனின் “”மக்களை நோக்கி மக்கள் தளபதி பயணம்” கொங்கு மண்டலத்தில் அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்குகிறது என்று இளைஞர் அணித் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரோட்டில் எம்.யுவராஜா அவர்கள் அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் இதுவரை 84 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஐயா ஜி.கே.வாசன் மக்களைச் சந்தித்துள்ளார்.

அக்டோபர் 26-ஆம் தேதி, ஈரோடு தெற்கு மாவட்டம், வெள்ளோட்டில் விவசாயிகளையும், சென்னிமலையில் விசைத்தறியாளர்களையும் சந்திக்கிறார்.

பின்னர் அன்றிரவு பெருந்துறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

இதன் தொடர்ச்சியாக திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் அக்டோபர் 27-ஆம் தேதியும், கோவை புறநகர் மாவட்டத்தில் அக்டோபர் 28-ஆம் தேதியும் நடைபெறும் நிகழ்ச்சியில் ஐயா ஜி.கே.வாசன் பங்கேற்கிறார் என்றார்.