சென்னையில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் தலைவர் திரு.ஜி.கே. வாசன்
சென்னையில் மழை பாதித்த பகுதிகளை த.மா.கா. தலைவர் திரு.ஜி.கே. வாசன் அவர்கள் நேற்று பார்வையிட்டார்.
சென்னை தரமணி, தந்தை பெரியார் நகரில் மழை பாதிப்பை பார்வையிட்ட திரு.ஜி.கே.வாசன்,
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும், மழைநீரோடு சாக்கடை நீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னை மாநகராட்சி தற்காலிக ஊழியர்களை நியமித்து, போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைவர் திரு.ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் மழைநீர் உட்புகுந்து பயிர்கள் சேதமடையும் அபாயம் இருப்பதாக தலைவர்
திரு.ஜி.கே. வாசன் அவர்கள் தெரிவித்தார்.
