மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவர் திரு.ஜி.கே.வாசன் உதவி
சென்னை வேளச்சேரி பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமாகா தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் உதவிப் பொருள்களை வழங்கினார்.
வேளச்சேரி பகுதியில் உள்ள தரமணி பிரதான சாலை, தந்தை பெரியார் நகர், ராமசாமி தெரு ஆகிய பகுதிகளுக்கு நேற்று சென்ற அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார். அவர்களுக்கு வேட்டி, சேலைகள், அரிசி, பருப்பு உள் ளிட்ட பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் திரு.ஜி.கே.வாசன்,
‘‘மழை, வெள்ளத் தால் சென்னையின் பல்வேறு பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன.
பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.
