தமிழகத்தில் கடும் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி வழங்க தமிழகஅரசு முன்வர வேண்டும்.
தலைவர் திரு.ஜி.கே.வாசன் கோரிக்கை
இது குறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த மழையினால், பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பலவீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழையால் சுவர் இடிந்து விழுந்து சிலர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, மக்களின் துயர் அறிந்து, சென்னை மாநகராட்சி உடனே போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
மழையால் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். மக்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதிஉதவியை அரசு வழங்கமுன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
