சட்டமன்ற கூட்ட தொடர் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை பேசி தீர்க்கின்ற அவையாக அமையவேண்டும்

நடைபெற்று கொண்டு இருக்கின்ற சட்டமன்ற கூட்ட தொடர் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும் என்று நான் நம்புகின்றேன். குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை பேசி தீர்க்கின்ற அவையாக அமையவேண்டும் என த,மா,கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரசின் கோவை மற்றும் தஞ்சை மண்டல இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தலைவர் ஜி,கே,வாசன் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும் போது,

தேசிய நாட்டு நலப்பணிதிட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இளம் வயதிலே சமூகப்பணிகளில் ஈடுபடுவதோடு நல்லபழக்க வழக்கங்களையும் பெற்று வருகிறார்கள்.

மத்திய அரசு இதற்காக வழங்கும் ஊக்கதொகையை பாதியாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது நல்லது அல்ல. மாநில அரசு இதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், மதுக்கடைகளை மூடுவது சம்பந்தமாக பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு கருத்து கேட்க வேண்டும். அந்த கருத்தின் அடிப்படையில் மதுக்கடைகளை முற்றிலும் மூடுவதாகவோ அல்லது படிப்படியாக மூடுவது பற்றியோ இந்த சட்டமன்ற கூட்டதொடரிலேயே அறிவிப்பு வெளியிடவேண்டும்,

நடைபெற்று கொண்டு இருக்கின்ற சட்டமன்ற கூட்ட தொடர் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும் என்று நான் நம்புகின்றேன். குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை பேசி தீர்க்கின்ற அவையாக அமைய வேண்டும்” என்று தெரிவித்தார்.