விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் நலன் காத்திட தரமான விதை உற்பத்திக்கு தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இது குறித்து தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நெல்லுக்கான ஆதார விலை போதுமானதல்ல என்று கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் அறிக்கையில் உற்பத்தி விலையில் 50 சதவிகிதத்தை சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்ததை ஐயா ஜி.கே.வாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தாங்கள் அளித்த வாக்குறுதிக்கு ஏற்பவும், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டும் நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் ஐயா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விதைச்சங்கத்தினரின் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு விவசாயத் தொழில் பெருக செயல்திட்டங்களை வகுத்து நிறைவேற்ற வேண்டும் என்றும் ஐயா ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.