தனிப்பட்ட ஆதாயத்துக்காக சிலர் சில கட்சிகளில் சேருவார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சிலர் கட்சி விட்டு கட்சி மாறி கொண்டு இருப்பார்கள். சிலர் தன்னை அடையாளம் காட்டி உயர்த்திய கட்சியை மறந்துவிட்டு வேறு கட்சிகளில் இணைந்து பதவிக்காக காத்து இருக்கிறார்கள்.
ஆனால் நல்ல அரசியலுக்கு எடுத்து காட்டாக ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் த.மா.கா. பாடுபட்டு வருகிறது. மக்கள் நம்பும் கட்சியாக, மக்களின் மரியாதைக்குரிய கட்சியாக விளங்கும் த.மா.கா.வில் தான் இப்படி கட்சிகளே வந்து இணையும். தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளன. கருப்பு பணம் ஒழிப்பு வரவேற்கத்தக்கது. வரும் காலத்தில் நம்மை போன்ற நேர்மையானவர்களுக்கு இது வெற்றியை தேடி தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
