ஏடிஎம்கள் 24 மணி நேரம் செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது போன்ற மத்திய பாஜ அரசினுடைய முயற்சி மற்றும் திட்டத்தை த.மா.கா. வரவேற்றதை நினைவு கூற விரும்புகிறேன். இருப்பினும் கடந்த 3 நாட்களாக அனைத்து தரப்பு மக்களும் அன்றாட உணவுக்கு தேவையான பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வாங்குவதற்கு பல சிரமங்களை அனுபவிப்பதை பார்க்கும் போது மத்திய அரசு வகுத்த திட்டம் சரியாக இருந்தாலும் கூட, அதனை சரி செய்வதற்காக திட்டமிடுதல், செயல்படுத்துதல் ஆகியவற்றில் சரியில்லை என்பதை மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றதே எடுத்துக்காட்டுகிறது.

எனவே மத்திய அரசு உடனடியாக அனைத்து ஏ.டி.எம். களும் 24 மணி நேரமும் சரியாக திறக்கப்பட்டு 50, 100, 500, 2000 போன்ற ரூபாய் நோட்டுகளை பெற வழி வகுத்து தர வேண்டும். இதன் மூலம் பொது மக்கள் குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் சிரமமின்றி அன்றாட வாழ்க்கையை வாழ அனைத்து நல்ல முயற்சிகளையும் உடனடியாக எடுத்து மக்கள் நலன் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *