உலகத்தர பல்கலையாக மாற்றும்போது இடஒதுக்கீட்டில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இந்தியாவில் உலகத்தர பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது. இதன் மூலம் அரசுத் துறையில் 10 கல்வி நிறுவனங்களையும் தனியார் துறையில் 10 கல்வி நிறுவனங்களையும் உலகத்தர பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அப்பல்கலைக்கழகங்களின் தரம் உயர்த்தப்படுவதற்காக கோடிக்கணக்கில் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது.

ஆனால், உலகத்தர பல்கலைக்கழகங்கள் அமையும் போது தமிழக பல்கலைக் கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கான மாணவ, மாணவிகளின் இட ஒதுக்கீட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சதவீதம் குறையும். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு 69 சதவீதம். ஆனால், தமிழக பல்கலைக்கழகங்களில் ஏதேனும் உலகத் தர பல்கலைக்கழகமாக மாறினால் மத்திய அரசின் கொள்கைப்படி அங்கு இடஒதுக்கீடு என்பது 49.5 சதவீதம் என்ற நிலைக்கு குறையும். இந்த நடவடிக்கை பாஜ அரசு இடஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகும். உலகத்தரப் பல்கலைக்கழகமாக மாற்ற நினைத்தால், இட ஒதுக்கீட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சதவீத முறையை பின்பற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *