அப்துல்கலாமின் அண்ணன் 100–வது பிறந்த நாள் விழா ஜி.கே.வாசன்வாழ்த்து

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அண்ணன் முகமதுமுத்துமீரான் லெப்பை மரைக்காயர் ராமேசுவரத்தில் வசித்து வருகிறார். அவருக்கு நேற்று 99 வயது முடிந்து 100 வயது பிறந்தது. அவரது 100–வது பிறந்த நாள் விழா அப்துல்கலாமின் ஆசைப்படி அவருடைய குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டது.

இதற்காக 25 கிலோ எடையில் பெரிய கேக் தயார் செய்யப்பட்டு இருந்தது. அதில் அப்துல்கலாமும், அவருடைய சகோதரரும் சேர்ந்து இருக்கும் படம் இடம்பெற்றிருந்தது. அந்த கேக்கை முகமதுமுத்துமீரான் வெட்டினார். அவரது மகள் நசீமா மரைக்காயர், பேரன் ஷேக்தாவூது ஆகியோர் கேக் ஊட்டினார்கள்.

ஜி.கே.வாசன், விவேக்

விழாவில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘அப்துல்கலாம் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்த மாமனிதர். மிகவும் நேர்மையாக பணியாற்றிய சிறந்த ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி. இந்த விழாவில் நான் கட்சிக்கு அப்பாற்பட்டு ஒரு இந்தியனாக கலந்துகொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த விழாவில் கலந்துகொண்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்’’ என்றார்.

விழாவில் அப்துல்கலாமின் நெருங்கிய நண்பர்களான விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன், வி.ஜி.சந்தோஷம் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். ஏராளமானோர் கலாமின் அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *