மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பாகிஸ்தானின் அத்துமீறிய ஊடுறுவல், துப்பாக்கிச் சூடு, பயங்கரவாத செயல்களால் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பாடம் புகட்ட வேண்டும். பாகிஸ்தானிலிருந்து சிமென்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. பாகிஸ்தான் சிமென்ட், இந்தியாவில் தயாரிக்கப்படும் சிமென்ட் தரத்தைவிடக் குறைவானதாகும்.
இந்த தரம் குறைந்த சிமெண்டை பயன்படுத்தினால் கட்டிடம் சேதமடைந்து, பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இரு நாடுகளிடையே சமூக நட்புறவு ஏற்படும் வரை சிமென்ட் உள்பட பாகிஸ்தானிலிருந்து எந்தவொரு பொருளையும் இறக்குமதி செ
