‘‘நெசவாளர்களின் பிரச்சனைகளை போக்க நான் போராடுவேன்’’

‘நெசவாளர்களின் பிரச்சனைகளை போக்க நான் போராடுவேன்’’

சென்னிமலையில் த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் பேச்சு

த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் ‘மக்களை நோக்கி மக்கள் தளபதி’ என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று மாலை ஐயா ஜி.கே.வாசன் ஈரோடு மாவட்டத்தில் தனது பயணத்தை தொடர்ந்தார்.

ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டுக்கு முதலாவதாக வந்த அவர் அங்கு விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெண்களை சந்தித்தார்.

கூலித் தொழிலாளர்கள் மத்தியில் ஐயா ஜி.கே.வாசன் தரையில் அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

பெண்களிடம் அவர் குறை கேட்டபோது அங்கு கூடி இருந்த பெண்கள், ‘‘குடிநீர் வசதி இல்லை, போதிய கழிப்பிட வசதி இல்லை. வீடுகளுக்கு பட்டா இல்லை’’ என்று கூறினர்.

மேலும் கூலி முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து சென்னிமலை பகுதியிலும் ஐயா ஜி.கே.வாசன் மக்களை சந்தித்தார்.

சென்னிமலை பகுதியில் உள்ள நெசவாளர்களையும் அவர் சந்தித்தார்.

அப்போது ஐயா ஜி.கே.வாசன் கூறும் போது, ‘‘நெசவாளர்களின் பிரச்சனைகளை போக்க மத்திய–மாநில அரசுகளிடம் போராடுவேன்’’ என்று கூறினார்.