ஈரோடு மாவட்ட பயணத்தின் இறுதி கட்டமாக பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஐயா ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
அப்போது தலைவர்அவர்கள் பேசியதாவது:–
கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையும் நிலையில் மக்கள் விரும்பும் இயக்கமாக த.மா.கா. விளங்குகிறது.
மக்கள் பணி மற்றும் இயக்கப்பணி என இரு பணிகளையும் இரு கண்களாக பாவித்து செயல்பட்டு வருவதால் வளர்ச்சி பெற்று வருகிறோம்.
பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த வெளிப்படையான நிர்வாகத்தின் வழியில் த.மா.கா நடைபோடும்.
தமிழக மக்களின் முக்கிய பிரசசனையான தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு தயங்குகிறது.
தற்போது பருப்புகளை பேர் வழிகள் பதுக்கி வருகிறார்கள்.
பதுக்கல் பொருட்களை மீட்டால் மட்டும் போதாது.
பதுக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஐயா ஜி.கே. வாசன் பேசினார்.
