திருவாரூர் மாவட்டம் குடவாசல் மஞ்சக்குடியில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
* சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த மண்ணின் மீது அளவற்ற பாசம் கொண்டவர்.
* மஞ்சக்குடி என்றாலே மகத்துவம் நிறைந்த மண்ணாகும்.
* கல்வியை கடைகோடி ஏழைகளுக்கும் கிடைக்க செய்தவர்.
* சம்பாத்தியத்தில் 10 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக செலவிடுங்கள் என்று சுவாமி கூறுவார்.
* சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளிலும் சுவாமி ஆர்வம் கொண்டிருந்தார்.
* தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளிலும் சுவாமி ஆன்மிக பணிகளை செய்து வந்தார்.
* எனது தந்தை அரசியலிலும், சொந்த வாழ்க்கையிலும் எந்த முடிவெடுத்தாலும் சுவாமியின் ஆலோசனைகளை கேட்பார்.
அதன்படி நானும் சுவாமியின் ஆலோசனை படி பல்வேறு முடிவுகளை எடுத்து இருக்கிறேன்.
* அவர் மறைந்தாலும், அவருடைய நல்ல எண்ணம் இந்த மண்ணிற்கு பல நன்மைகளை செய்யும்.
* அவருடைய எண்ணங்களையும், அவர் விட்டு சென்ற பணிகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும்
