காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் ஐயா ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் அமைக் காத மத்திய அரசை கண்டித்தும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஐயா ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

செயற்குழு உறுப்பினர்கள்
ஐயா ஜி.ஆர்.மூப்பனார்,
ஐயா சுரேஷ்மூப்பனார்,
ஐயா சுதாகர் மூப்பனார், இளைஞரணி தலைவர் யுவராஜா, விவசாய பிரிவு மாநில செயலாளர் புலியூர் நாகராஜன், மாநில நிர்வாகிகள் விடியல்சேகர், திருஞானசம்பந்தம், வடக்கு மாவட்ட தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஐயா ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

* தமிழகத்துக்கு ஆண்டுதோறும் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புபடி கர்நாடக அரசு 192 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும்.

ஆனால் கர்நாடக அரசு இதுவரை திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை.இது டெல்டா விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.

* கர்நாடக அரசு மழை வெள்ளம் ஏற்படும் போது உபரி நீரை மட்டும் தருகிறது. அங்கு புதிய அணைகளை கட்டி தண்ணீரை தேக்க முயற்சி செய்கிறது.

* கர்நாடக அரசு தண்ணீர் கொடுக்க மறுப்பதால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கும். பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

* கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்காததால் நெற்களஞ்சியம் பாலைவனம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

* 3 போகம் சாகுபடி செய்த விவசாயிகள் இன்று 1 போகம் சாகுபடி கூட செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

இதனால் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். எனவே தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை. காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்காமல் இருப்பது பாரதீய ஜனதா அரசின் மெத்தனத்தை காட்டுகிறது.

* கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது சட்டத்திற்கு எதிரானது. நீதிக்கு புறம்பானது.

* கர்நாடக அரசு அணை கட்ட முயன்றால் மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

* கர்நாடக அரசு உரிய தண்ணீரை திறந்து விட தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அதன் பின்னர் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை சென்று சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

* கர்நாடக அரசு சட்டத்தை மதிக்காமல் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.

* சமீபத்தில் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்குமுறை ஆணையம் குறித்து மத்திய அரசு எதுவும் கூறவில்லை.

* கர்நாடக அரசு, தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை உரிய நேரத்தில் கொடுக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இயற்கை வளங்களை வெளிக்கொணர 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த மறைமுகமாக மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

* நெல்கொள்முதல் விலையை ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தற்போது அறிவித்துள்ள விலைஉயர்வு போதுமானது அல்ல. மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

* விவசாயிகளின் தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஐயா அவர்கள் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், நாகை தெற்கு மாவட்ட தலைவர் பி.வி.கே.பிரபு, நாகை வடக்கு மாவட்ட தலைவர் சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் என்.ஆர்.நடராஜன், பி.எல்ஏ.சிதம்பரம், அந்தோணிசாமி, மாநில நிர்வாகிகள் அசோக்குமார், ஜிர்ஜித், சாதிக்அலி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குமார், ராஜசேகரன், ராஜாங்கம் மற்றும் மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநகர தலைவர் குணசேகரன் நன்றி கூறினார். 12033071_541818849299656_7223041800458421558_n