எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்:
ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இது குறித்து த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை :–
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது என்று கூறி எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக தற்போது டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்திருப்பது கண்டனத்திற்குரியது.
எண்ணெய் நிறுவனங்கள் இன்றைய பொருளாதார சூழலை கருத்தில் கொள்ளாமல், மக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் தற்போது டீசல் விலையை உயர்த்திருப்பது ஏற்புடையதல்ல.
எனவே மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர்கள் தற்போது உயர்த்திருக்கும் டீசல் விலையை உடனே திரும்ப பெற வலியுறுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல்–விலை உயர்வு, விலை–குறைவு குறித்து தெளிவான, வெளிப்படையான தன்மையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
