மீன் வளத்துறை மூலம் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மீனவர்களின் நியாயமான கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும்.
மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். உள்நாட்டிலும், மீன் வளர்ப்புக்கான உற்பத்தி எந்திரங்களை உருவாக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
த.மா.கா. மாநில மீனவரணி ஆலோசனைக் கூட்டம் தலைவர் கஜநாதன் தலைமையில் இன்று சென்னை அடையாறில் நடந்தது.
துணை தலைவர் வேணுகோபால், கொட்டிவாக்கம் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
‘மீன் வளத்துறை மூலம் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மீனவர்களின் நியாயமான கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும்.
மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். உள்நாட்டிலும், மீன் வளர்ப்புக்கான உற்பத்தி எந்திரங்களை உருவாக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.
மீனவரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* மத்திய அரசில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் தொடங்க வேண்டும்.
* மீனவர்களுக்கு தனி வங்கி உருவாக்க வேண்டும்.
* மீனவ பெண்களுக்கு மீன் வியாபாரத்துக்கு வட்டியில்லா கடன் ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும்.
* மத்திய, மாநில அரசுகள் கடல்சார் பல்கலைக்கழகத்தில் மீனவர் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுத்து இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் ஞானதேசிகன், பீட்டர் அல் போன்ஸ், எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம், விஸ்வநாதன், ஞானசேகரன், விடியல் சேகர், மகேஸ்வரி, யுவராஜா, கத்திபாரா ஜனார்த்தனன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், மாவட்ட தலைவர் ஜி.ஆர். கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
