இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமருடனான பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்களுக்குச் சாதகமான வெளிப்படையான அறிவிப்புகள் இல்லை.
தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் கண்டனம்
இது தொடர்பாக ஐயா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைப் பிரதமருடனான பேச்சுவார்த்தையின்போது இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், சிறைப் பிடித்தல் போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவையான அறிவிப்புகள் எதுவும் இல்லை.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு மறுகுடியமர்த்தல், அதிகாரப் பங்கீடு வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கூறியிருப்பதை நிறைவேற்ற, இந்தியப் பிரதமர் தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித உரிமை மீறல் குறித்து
வெளிப்படையான விசாரணைக்கு உள்பட்டு, உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அந்நாட்டுப் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.
மேலும், இரண்டு நாட்டு பிரதமர்களின் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் செயல்வடிவம் பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார்.
