த.மா.கா. 20 அம்சத் திட்டங்கள் நெல்லையில் அறிமுகம்

திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில், நம் கட்சியின் 20 அம்ச திட்டத்தை தலைவர் ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார்.

த.மா.கா சார்பில் தேசியத் திருவிழா என்ற பெயரில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐயா ஜி.கே.வாசன் பேசியதாவது:

தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் தொடங்கப்பட்டு 10 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் குறைகளைக் கேட்டறிந்து அதனை தீர்க்கும் கடமையோடு கட்சியினர் செயல்பட வேண்டும்.

நம் கட்சியின் 20 அம்ச திட்டம் ஒரு புள்ளிதான். அதன்மீது நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படையான நிர்வாகம் என்ற கோலத்தை வரைய வேண்டும் என்றார்.

20 அம்ச திட்டம் அறிமுகம்:

கூட்டத்தில், கட்சி சார்பில் 20 அம்ச திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

* மது இல்லா தமிழகம்,

* மாசு இல்லா சுற்றுச்சூழல்,

* ஊழல் இல்லா அரசு நிர்வாகம்,

* மோதல் இல்லா மத நல்லிணக்கம்,

* சாதிகளற்ற தமிழ்ச் சமுதாயம்,

* வணிகம் ஆகாத கல்வி,

* கொள்ளை போகாத இயற்கை வளம்,

* தடையில்லா மின்சாரம்,

* தாராளமாக உணவுப் பொருள்கள்,

* கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி,

* எல்லோருக்கும் மருத்துவ வசதி,

* லாபகரமான வேளாண்மை,

* சீர்மிகு நீர் மேலாண்மை,

* சிறப்பான சட்டம்-ஒழுங்கு,

* பெண்ணுரிமைக்குப் பாதுகாப்பு,

* அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் சமூக நீதி,

* உறுதி செய்யப்பட்ட தொழிலாளர் உரிமைகள்,

* வேலைவாய்ப்புகள் நிறைந்த தொழில் வளர்ச்சி,

* எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி,

* தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய அதிகாரப் பங்கீடு ஆகியவை அந்தத் திட்டங்களாகும்.

இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்.

பி.கதிர்வேல், எஸ்.ஆர்.அய்யாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

துணைத் தலைவர் எஸ்.எஸ்.ராமசுப்பு வரவேற்றார்.

தியாகி லட்சுமிகாந்தன் பாரதி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பி.எஸ்.ஞானதேசிகன், ஜி.ஞானசேகரன், விடியல் சேகர், ஏ.எஸ்.மகேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐயா சுரேஷ் மூப்பனார் அவர்களும் பங்கேற்றார்.

இறுதியில் முருகேசன் நன்றி கூறினார்.12003343_893512157390391_6456893800785941046_n