“பல்வேறு சோதனைகளைத் தாண்டி வளர்ந்து வரும் இயக்கம் தமிழ் மாநில காங்கிரஸ்”
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் பூமா. ராமசாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் பேச்சு.
மேலும் தலைவர் அவர்கள் பேசியது:
தேர்தல்கள் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் கிடையாது. மக்களின் கணிப்பே இறுதியானது.
பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
நேர்மை, தூய்மை, எளிமை, வாய்மை நிலைப்பாட்டுடன் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்று ஐயா ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தார்.
விழாவில் மாவட்டத் தலைவர்(வடக்கு) கூகூர்சண்முகம்,
திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் சாருபாலா ஆர். தொண்டைமான், பூமா. ராமசாமி ஆகியோர் பேசினர்.
இதில், மாநிலச் செயலர்கள் ஆர்.எல். தமிழரசன், லெனா. சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.எல்.ஏ. சிதம்பரம், மாவட்ட துணைத் தலைவர் ஆலத்தூர் எம். கிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் மாத்தூர் ஏ. திருப்பதி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
