த.மா.கா.தென் மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மதுரைக்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது :-
மாநில, மாவட்ட, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையை அடுத்து கரூர், சென்னை, திருவள்ளூரிலும் இளைஞரணி சார்பில் மண்டல கூட்டங்கள் நடத்தப்படும்.
ஜனவரியில் மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சுதந்திர தின விழாவில், மின்வெட்டு இல்லாத மாநிலம் என முதல்வர் பேசியதை மக்கள் ஏற்கவில்லை என்றும்
நன்மை பயக்கும் அரசாக ஆளும் அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர்,
இளைஞரணி மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று புதிய இணையத்தை தலைவர் தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில் இளைஞரணி தலைவர் யுவராஜ் மற்றும் மூத்த துணைத் தலைவர்கள் பி.எஸ். ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், நிர்வாகிகள் கோவைத் தங்கம், என்.எஸ்.வி. சித்தன், த.மா.கா மாநகர் மாவட்ட தலைவர் சேதுராமன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
