தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

கடந்த 6 ஆம் தேதி கத்தார் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுகொண்டிருந்த போது ஈரான் நாட்டு கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் ஆண்டனி அனீஸ் உயிரிழந்திருப்பது வேதனையளிப்பதாகவும், அவரது உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று திரு.ஜி.கே. வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.