2016 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் த.மா.கா மக்கள் இயக்கமாக தயாராகி வருகிறது

2016 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் த.மா.கா மக்கள் இயக்கமாக தயாராகி வருகிறது.

நானும் மக்களை சந்தித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் பேட்டி

முன்னதாக , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் அடையாரில் இன்று காலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், துணை தலைவர்கள் கோவை தங்கம், ஞானசேகரன், கத்திப்பாரா ஜெனார்த்தனன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில செயலாளர்கள் என்.டிஎஸ்.சார்லஸ், வில்லிவாக்கம் சுரேஷ், அனுராதா அபி, சைதை மனோகர், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.சீனிவாசன், ராஜமகாலிங்கம், கலைப்பிரிவு மாநில தலைவர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா, டி.எம்.பிரபாகர், ஜவகர் பாபு, சுரேஷ்பாபு, சைதை மனோகரன், சைதை நாகராஜன், திருவேங்கடம், ராமபுரம் ஏழுமலை, சித்தர்ராஜ், அண்ணாநகர் ராம்குமார், மகாத்மா சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சவுந்தர் முருகன், ஜி.ஆர்.கதிரவன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.