என்.எல்.சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

என்.எல்.சி தொழிலாளர்களின் போராட்டத்தால் மின் உற்பத்தியில் 700 மெகாவாட் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் காரணமாக மின் உற்பத்தி மேலும் குறைந்து தமிழகத்திற்கான மின் பகிர்மானம் குறையும் ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார்.

எனவே இவ்விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய எரிசக்தி அமைச்சர் முன்னிலையில் என்.எல்.சி நிர்வாகம் தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனை தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் ஐயா வாசன் கோரியுள்ளார்.