ஓட்டுக்கு பணம் கொடுப்பதை இளைஞர்கள் தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வறட்சி மற்றும் வார்தா புயல் பாதிப்புக்கான நிவாரணங்களை வழங்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் மக்கள் போராடுவதும் அதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக 15 நாட்களாக போராட்டம் நீடிக்கிறது. ஆனால் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. முதல்-அமைச்சர் வாக்குறுதி அளித்தாலும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாததால் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. உடனடியாக மத்திய அரசு இந்த திட்டத்தை நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா அரசுகள் தமிழகத்துக்கு வரும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசு கண்டிக்கவில்லை. தமிழகத்திலும் நிரந்தர அரசு இல்லாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளோம். வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறேன். கடந்த தேர்தல் அறிவிப்பின் போது போட்டியிட மனு செய்தவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஊக்குவிப்பேன்.

வருகிற 8-ந்தேதி ராமேஸ்வரத்தில் மீனவ பெண்களோடு மகளிர் தினவிழா கொண்டாடுகிறோம்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். ஆனால் மே 7-ந்தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் படிப்பு வி‌ஷயத்தில் தமிழக அரசு ஆழம் புரியாமல் தவறு செய்கிறது. மக்கள் செல்வாக்கு இழந்த அரசாக இருக்கும் இந்த அரசு நீட் தேர்வு வி‌ஷயத்தில் இரட்டைவேடம் போடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *