அதிமுக அதிகார பகிர்வு சண்டையால், தமிழகத்தில் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது.
எடுத்துக் காட்டாக சென்னை, அண்ணாமலை, மதுரை பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம் இது வரை இல்லை.
வறட்சி நிவாரணத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு இலங்கையுடன் கடினமான முறையில் பேச்சு நடத்தி சுமூக தீர்வு மேற்கொள்ள வேண்டும்.
மீனவரை சுட்ட இலங்கை கடற்படையின் குற்றவாளியை விசாரணை மூலம் இந்தியா கொண்டு வந்து உச்ச பச்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
