டீசல் விலை உயர்வால் சரக்குக் கட்டணம் உயர்ந்து விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும். இது சாதாரண மக்களை வெகுவாக பாதிக்கும். மேலும் மத்திய அரசு கலால் வரியையும், மாநில அரசு விற்பனை வரியையும் குறைத்து, பெட்ரோல், டீல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து இது போன்ற விலை உயர்வால் மக்களின் மீது சுமையை ஏற்றக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒருபுறம் கலால் வரி உயர்வு, மறுபுறம் ஆயில் நிறுவனங்கள் தங்களது லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு விலை நிர்ணயம் செய்வதால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை, ஆயில் நிறுவனங்களிடம் இருந்து திரும்ப பெறவேண்டும்.
