சென்னை : மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் மனதை மாற்றி கொள்ளவில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேலும் புதிய வாக்காளர்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாக கூட்டணியை மேலும் பலப்படுத்துவோம் என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறினார். பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
