ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒரு மித்த கருத்தைக் கொண்ட கோரிக்கை, ஜல்லிக்கட்டுப் பேரவையைச் சார்ந்தவர்கள் மற்றும் ஆர்வலர்களின் தொடர் முயற்சி, குறிப்பாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனின் ஒருங்கிணைப்பு பணி ஆகியவற்றின் அடிப்படையிலேயே இது சாத்தியமாயிற்று.
