மத்திய அரசு வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, வங்கிகளின் சேவைகள் தொடர்ந்து தங்கு, தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, வங்கிகளின் சேவைகள் தொடர்ந்து தங்கு, தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் நாளை 08.01.2016 வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள். பாரத ஸடேட் வங்கியுடன் இணைந்துள்ள வங்கிகளில் மேற்கொள்ளப்படும் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும், வரையறை செய்யப்பட்ட பணிமுறைகளை அமல்படுத்தப்பட வேண்டும், அரசின் வழிக்காட்டுதல்படி கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனங்களை நீட்டிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் சுமார் 3.5 இலட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர்.

நாளை வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றால் அதனைத் தொடர்ந்து இரண்டாம் சனிக்கிழமையும், அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காமல் ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

இந்தப் போராட்டத்தால் வங்கியின் சேவை முடங்கி வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவார்கள். தற்போது பண்டிகைக் காலமாக இருப்பதால் பொது மக்களுக்கு வங்கியின் சேவை மிகவும் அவசியமாகும். மேலும் நாள் தோறும் வங்கியில் நடைபெறும் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனையும் தடைப்படும். இதனால் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் தடை ஏற்படும்.

எனவே வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய நிதி அமைச்சர் உடனடியாக இந்தியன் வங்கி சங்கத்தின் (IBA) மூலம் வங்கி ஊழியர்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறி, வங்கிகளின் சேவைகள் தொடர்ந்து தங்கு, தடையின்றி நடைபெற வேண்டும்.

G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *